Moral Stories in Tamil - Hello Friends, Today in This Post we will going to share with you Moral Stories in Tamil. These Moral Stories are very interesting. Please read the full stories. I hope you like these Moral Stories.

Moral Stories in Tamil

Moral Stories in Tamil List

கழுதையின் தந்திரம்

கற்றப் பாடம்

ஓநாயும் ஆட்டுமந்தையும்!

விவசாயியும் கிணறும்!

உதவிக்குக் கிடைத்தப் பரிசு

உயிரைக் காத்த உண்மை

விலை உயர்ந்த பொருள்

விஷயங்கள்

எறும்பும் வெட் டுக்கிளியும்

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்

நான்கு மாடுகளும் புலியும்!

பறவையும் ஆமையும்!

ஓநாயும் ஆடு மேய்க்கும் இடையனும்!

ஒரு மனிதனும் பூனையும்!

ஒரு பெருமிதமுள்ள பயணி!

தங்க முட்டை!

நன்றி கொன்ற ஓநாய்

நனைந்த கால்சட்டைகள்

கோபத்தை கட்டுப்படுத்துதல்.!

மூத்தோர் சொல் கேள்!

தீய பழக்கங்கள்!

சுவரின் மறுபக்கம்!

சேவலும் இரத் தினக்கல்லும்

புகையிலை

தாய் நண்டும் குழந்தை நண்டும்!

ஒட்டகமும் அதன் குழந்தையும்!

அடிமையானக் குதிரை

அழகின் ஆபத்து

உள்ளதும் போச்சு

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

சிங்கமும் கரடியும்

கழுதையின் தந்திரம்

வியாபாரி ஒருவர் உப்பு வாங்குவ தற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட் டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது.

அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்ட போது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது.

ஓடையில் விழுந்ததால் கழு தையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று.

ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது.

வியாபாரி திரும்பிப்போய், இன் னும் கூடுதலாக உப்பைத் தனது கோணி களில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந் தான்.

ஓடையை நெருங்கியதும் கழுதை வேண்டுமென்றே மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண் டது.

எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. வியாபாரிக்குக் கழுதை யின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட் டிச் சென்றான்.

அங்கே உப்புக்கு பதி லாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கி கழுதையின் மேல் பாரத்தை வைத் தான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது.

ஆனால் கடற்பஞ்சு தண்ணீர்ரை உறிஞ் சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு மடங்கு பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.

Moral of the Story: தெரிந்தே தவறு செய்யக் கூடாது

கற்றப் பாடம்

கற்ற பாடம் ஒரு நாள் காட் டில் உள்ள சிங்கம், நரி, கழுதை ஆகிய மூன்றும் சேர்ந்து வேட்டைக்குச் சென் றன.

அன்று வேட்டையில் கிடைப்பதை சமமாகப் பிரித்துக் கொள்வது என்று மூன்றும் முடிவு செய்தன. வேட்டைக்கு செல்லும் வழியில் கொழுத்த கலைமான் ஒன்று அகப்பட்டது.

அதனை சிங்கம் பங்கு போடச் சொல்லி கழுதைக்கு கட் டளை இட்டது. அக்கழுதையோ ஏற்க னவே மூவரும் செய்து கொண்ட ஒப்பந் தப்படி கலைமானை மூன்று சமப்பங்காக கூறு போட்டது.

சிங்கமோ, தனக்கு மரி யாதைக் கொடுக்காமல் சமபங்கு போட்ட கழுதையின் மேல் கோபம் கொண்டு அதன் மீது பாய்ந்து கழுதையைக் கொன்றது.

பிறகு உடன் இருந்த நரியை பங்கு போடச் சொல்லியது சிங்கம். சிறிய பங்கை தனக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ள அனைத்தையும் சிங்கத்திற்கே கொடுத்தது. அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த சிங்கம் இவ் 

வளவு பெருந்தன்மையையும், மரியாதை யையும் எங்கே கற்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த நரி, இறந்து கிடக்கும் கழு தையைச் சுட்டிக்காட்டி, இதனிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது.

Moral of the Story: கெட்டவர்கள் நியாயத் திற்கு மதிப்பு அளிக்க மாட்டார்கள்.

ஓநாயும் ஆட்டுமந்தையும்!

ஒரு நாள் ஓநாய் ஒன்று அருகில் இருந்த ஆட்டுமந்தையில், இருந்து தனக்கான உணவை அடித்து கொல்ல முயன்றது.அச்சமயம் ஓநாய் ஆடுகளை அடித்துக் கொல்ல முயல்வதை கண்ட ஆட்டுமந்தையின் உரிமையாளர், அந்த ஓநாயை அடித்து விரட்டினார்.ஓநாய் அதிக தூரம் செல்லும் வரை விரட்டியடித்தார்.

பின் இன்னொரு நாள் அதே ஓநாய் ஆடுகளை அடித்து, உணவு உண்ண வந்தது. அச்சமயம் அந்த உரிமையாளரின் வீட்டில் இருந்து நல்ல மணம் வந்தது. என்ன மணம் என்று அறிய எட்டிப்பார்த்த ஓநாய், அங்கு ஆடுகளை வெட்டி அறுசுவை உணவு சமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தது. அச்சமயம் ஓநாய்,“இதை நான் செய்தால் தவறு; அடித்து விரட்டுவீர். ஆனால் நீங்கள் செய்தால் சரியா?” என்று யோசித்தது.

Moral of the Story: நாம் நமது தவறுகளை எண்ணி பார்க்காமல், மற்றவர் செய்யும் தவறுகளைப் பெரிதாக பேசி அவர்களின் மீது குற்றம் சாட்ட முயல்கிறோம். இந்தப் பழக்கத்தை ஒவ்வொருவரும் கைவிட வேண்டும்.

விவசாயியும் கிணறும்!

ஒரு விவசாயி, தனது விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.அச்சமயம் ஒரு தந்திரமான விவசாயிடம் இருந்து கிணற்றை விலைக்கு வாங்கினார். பின் அந்தத் தந்திரமான நபர், அந்த விவசாயியைக் கிணற்றில் இருந்து நீர் எடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார்.விவசாயி,” ஏன் நீர் எடுக்கக்கூடாது?” என்று கேட்டதற்கு, “நான் உனக்கு கிணற்றை தான் விற்றேன். நீரை அல்ல!”என்று கூறி விட்டு அலட்சியமாக நடந்து சென்றார்.

இதை குறித்து விவசாயி, அக்பர் அரசின் மிகச்சிறந்த அறிவாளியாக விளங்கிய ‘நீதியரசர் பீர்பால்’ அமைச்சராக இருக்கும் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை நன்கு கேட்டறிந்த பீர்பால் வழக்கின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்.

அச்சமயம் இருவரின் வாதத்தையும் கேட்டுவிட்டு, பீர்பால்,” தந்திரமான விவசாயி கூறுவது நியாயம்தான்.” என்று கூறி,ஒரு நிபந்தை இட்டார். “கிணறு விற்கப்பட்டது; ஆனால் நீர் விற்கப்படவில்லை; ஆகையால், நீங்கள் கிணற்றில் இருக்கும் நீரை இன்றே அகற்றிவிட வேண்டும்; இல்லையேல் நீர் அவருக்கே சொந்தமாகிவிடும்.” என்று அந்த நிபந்தனையே தீர்ப்பாக வாசித்தார்.

அந்த தந்திரமான விவசாயியும், தன் தவறை உணர்ந்து விவசாயி நண்பரிடம் மன்னிப்பு கேட்டார்.

Moral of the Story: ஏமாற்றுவது ஒரு நல்ல பழக்கமல்ல, இது அதிக காலத்திற்கு பலன் அளிக்காது; மீறி நீங்கள் யாரையேனும் ஏமாற்றினால், அதற்கான பலனை விரைவில் அனுபவிப்பீர்.

உதவிக்குக் கிடைத்தப் பரிசு

ஒரு நாள் பாம்பு ஒன்று குளிர் காலப் பனியில் விரைத்து சுருண்டு கிடந்தது. அந்த சமயத்தில் அவ்வழியே வந்த குடியானவன் அப்பாம்பிற்கு உதவ நினைத்து அப்பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

குடியானவனுடைய உடல் சூடு பட்டதும், பாம்பு மெல்ல மெல்ல உணர்வு பெற் றது. அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய குடியான வன் மார்பைப் பலமாகக் கடித்தது.

பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த குடியானவன் தன் செய்கைக்காக வருந்தினான்

குடியான வன் அப்பாம்பைப் பார்த்து உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்த தற்கு எனக்கு மிகச்சரியான தண்டனை கிடைத்திருக்கிறது என்றான்.

Moral of the Story: கேட்காமல் செய்யும் உதவி சமயம் உனக்கே ஆபத்தை ஒரு விளைவிக்கக்கூடும்.

உயிரைக் காத்த உண்மை

நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன.

இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவ சாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங் களை வைத்தான்.

ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந் தயங்களில் மாட்டிக் கொண்டன. அவற் றைப் பிடித்த விவசாயி முதலில் முயலி டம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான்.

அதற்கு முயல் முள் ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன்.

இனி ஒருபோதும் இங்கே வரமாட் டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியி டம் கேட்டான்.

அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது. அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான்.

அதற்கு அந்த ஓநாய் நீ திருடி வைத் துள்ள எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது.

மூன்றை யும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப் புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான்.

Moral of the Story: உண்மை நிச்சயம் வெல் லும்.

விலை உயர்ந்த பொருள்

ஒரு நாள் இரவில் நகர்வலம் வருவதற்காகக் கொள்ளைக் காரனைப் போல மாறுவேடம் அணிந்து கொண்டு, அவரின் உருவத்தை கண்ணாடியில் பார்த்தார்.

அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவரை யார் என்று கண் டுபிடிக்க முடியாத அளவிற்கு வேடம் பொருத்தமாக இருந்தது.

பீர்பாலை யும் துணைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து பீர்பாலின் வீட்டிற்குச் சென்றார்.

பீர்பாலிடம் இதே வேடத்துடன் சென்று தான் யார் என்பதைச் சொல் லாமல் விளையாடிப் பார்க்கலாம் என்று தோன்றிற்று.

பிறகு பீர்பாலின் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினார். வெளியே வந்து பார்த்த பீர்பால் யார் என்று தெரியா மல் சிறிது தடுமாறினார்.

சற்று நிதானித் துப் பார்த்தப் பிறகு அவருக்கு வந்திருப் பது மன்னர் என்பதை புரிந்து கொண் டார். அக்பர் தன் குரலை மாற்றி,

உன்னி டம் இருக்கும் விலை உயர்ந்த பொருட் களை எல்லாம் கொடுத்து விடு இல்லா விட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று பீர்பாலை மிரட்டினார்.

பீர்பால் சிரித்துக் கொண்டே மன் னர் அவர்களே! என்னிடம் விலை உயர்ந்த பொருள் என்றால் அது என் உள்ளம் தான்.

அதை ஏற்கெனவே தாங் கள் கொள்ளையிட்டு விட்டீர்கள். நீ பலே ஆளய்யா… நான் எவ்வளவோ சிரமப் பட்டு மாறுவேடம் பூண்டு வந்தாலும் ஒரே நொடியில் நீர் கண்டு பிடித்து விடுகிறீர் கள் என்று பாராட்டினார் அக்பர்.

Moral of the Story: உள்ளம் தான் உயர்ந்தது.

விஷயங்கள்

காஷ்மீரின் மன்னன் ஒரே மாதி ரியான மூன்று பொம்மைகளை அக்ப ருக்கு அனுப்பி வைத்தான்.

கூடவே மூன் றுக்கும் உள்ள வித்தியாசத்தையும் கண் டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்கிற துண்டுச் சீட்டு ஒன்றும் இணைத்திருந் தான்.

அரச சபையிலிருந்த அத்தனை பேரும் அந்த மூன்று பொம்மைகளைப் பார்த்தனர். ஒரு வித்தியாசம் கூட இல் லாமல் மூன்றும் ஒன்றாக இருப்பதாகவே தோன்றியது.

அந்த மூன்று பொம்மை களையும், அந்தக் குறிப்பையும் பீர்பாலி டம் கொடுத்தார் அக்பர். பீர்பாலும் மூன்று பொம்மைகளையும் நன்றாகப் பார்த்தார். பிறகு ஒரு குச்சி எடுத்து வரச் செய்தார்.

பொம்மைகளின் காதில் விட்டுக் காட்டினார். ஒரு பொம்மைக்கு குச்சி மறு காது வழியாக வந்தது. மற்றொன்றுக்கு வாய் வழியாக வந்தது.

மூன்றாவதுக்கு குச்சி வெளிப்படவேயில்லை. அரசே, காதில் கேட்பதையெல்லாம் பிறரிடம் சொல்லிவிடும் பொம்மை வம்புக்கார

பொம்மை. இது மிகவும் மட்டமானது. ஒரு காது வழியாக உள்ளே போகும் விஷ யத்தை மறு காது வழியாக வெளியிடும் பொம்மை அலட்சியம் கொண்ட பொறுப் பற்ற பொம்மை.

காதில் வாங்கும் விஷயத்தை மன தில் தங்க வைத்து அதிலிருந்து அனு பவத்தைப் பெறும் பொம்மை முதல் தரம் என்றார் பீர்பால்.

எல்லோரும் பொம்மையைப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை பீர்பால் கண்டு பிடித் தார்.

மேலோட்டமாகப் பார்க்கும் யாருக் கும் எந்த விஷயமும் தெரிவதில்லை. நுணுக்கமான அறிவுடையவர்களால் தான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

எறும்பும் வெட் டுக்கிளியும்

வெட்டுக்கிளி ஒன்று மதிய நேரத் தில் இங்கும் அங்கும் தாவி தாவிக் குதித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட் டுக் கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியே வந்த எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற் குச் சென்று கொண்டிருந்தது.

அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பி டம் என்னைப் போல நீயும் என்னுடன் சிறிது நேரம் விளையாடலாமே என்றது.

அதற்கு எறும்பு இன்னும் சில நாட்க ளில் மழைக்காலம் தொடங்க இருக்கி றது. மழைக்காலத்தில் யாரும் வெளியே செல்ல முடியாது.

அதனால் அந்த நேரத்திற் குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேக ரித்து வைத்துக் கொள்கிறேன் என் றது.

வெட்டுக்கிளி, எறும்பிடம் மழைக்கா லம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடிச் சென்றது.

நாட்கள் கடந் தன, மழைக்காலமும் வந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு பசி ஏற்பட்டது. எறும்பு உணவு சேமித்து வைத்திருக்கும் அத னிடம் போய்க் கேட்டுபார்க்கலாம் என்று நினைத்த வெட்டுக்கிளி எறும்பின் வீட் டிற்குச் சென்றது. எறும்பின் வீட்டுக்குச் சென்று எறும்பிடம் எனக்கு மிகவும் பசிக் கிறது.

ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டது. தான் சேமித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளியிடம் கொடுத்தது எறும்பு.

பிறகு எறும்பு வெட் டுக்கிளியைப் பார்த்து, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நம் இரு வருக்கும் உதவியுள்ளது.

எனவே இனி மேலாவது நீ சோம்பலில்லாமல் வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டி யதை சேமித்து வைத்துக்கொள் என்றது.

எறும்பானது கால நேரம் பாராது உழைத் தால் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக் கும் என்று வெட்டுக்கிளிக்கு உணர்த்தி யது.

Moral of the Story: எதிர்காலத்திற்குத் தேவை யானதை நிகழ்காலத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்

ஒரு காட்டில் ஒரு தவளை யும், ஒரு சுண்டெலியும் நண்பர்க ளாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தி யது.

அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித் தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந் தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத் தவரை ஆதரவுக்கு அழைத்தது.தவ ளையும் அதேபோல் தன் இனத்தவர் களை உதவிக்கு அழைத்தது.

சண்டையில் நிறைய எலிக ளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன.

பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரை யாக்கிக் கொண்டன.

Moral of the Story: எளியவன் தனித்து இருந் தால் அவனை வலியவன் வெல்வது எளிது.

நான்கு மாடுகளும் புலியும்!

நான்கு மாடுகள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒன்றாக சேர்ந்து வளர்ந்து, உண்டு, ஒன்றாகவே இருந்து வந்தன. இவர்களின் ஒற்றுமை காரணமாக சிங்கமோ, புலியோ இவற்றை இரையாக்க முடியாமல் இருந்தன.அந்த அளவுக்கு நான்கு மாடுகளும் ஒற்றுமையுடன் இருந்தன.

சில நாட்களுக்கு பின், மாடுகளுக்குள் ஏற்பட்ட சண்டையால் அவைப் பிரிந்தன. பின் இதை சாதகமாக்கிக் கொண்ட புலி, அவற்றை மறைந்திருந்து, ஒவ்வொன்றாக வேட்டையாடிக் கொன்று,இறுதியில் அனைத்தையும் தனக்கு உணவாக்கிக் கொண்டது.

Moral of the Story: ஒற்றுமையே பலம்; ஒற்றுமையாக இருந்தால் அதிக நன்மை ஏற்படும்.

பறவையும் ஆமையும்!

ஒரு பறவை கூடு கட்டியிருந்த மரத்தின் கீழ், ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஆமை, மரத்தில் இருந்த பறவையிடம் பேச்சு கொடுத்தது. அப்பொழுது பறவையின் கூடு அழகாக இல்லை என்றும், அசிங்கமாக, உடைந்த குச்சிகளால் கட்டப்பட்டுள்ளது என்றும் ஆமை, பறவையை மட்டம் தட்டிக் கேலி பேசியது. ஆனால், தனது வீடான தன் முதுகின் மீதுள்ள ஓடு,சரியான வடிவம் கொண்டு பலமாக இருப்பதாகக் கூறியது.

அதைக் கேட்ட பறவை என்னுடைய கூடு உடைந்து அசிங்கமாக இருந்தாலும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நானே உருவாக்கியது; இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பதிலளித்தது.

மேலும் ஆமை, தனது கூட்டை விட உனது கூடு சிறந்தது அல்ல என்று பறவையிடம் கூறியது. அதைக்கேட்ட பறவை தனது கூடு தான் உனது கூட்டினை விட சிறந்தது; ஏனெனில் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் தன்னுடன் இந்த கூட்டில் சேர்ந்து வாழ முடியும்; ஆனால் உனது கூட்டில் உன்னை தவிர வேறு யாரும் நுழையக்கூட முடியாது என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தது.

Moral of the Story: தனியாக பெரிய பங்களாவில் வசிப்பதை விட, உறவு மற்றும் நண்பர்களுடன் ஒரு சிறிய குடிசையில் வசிப்பது மேல்!

ஓநாயும் ஆடு மேய்க்கும் இடையனும்!

முன்னொரு காலத்தில், ஒரு ஆடு மேய்க்கும் இடையச் சிறுவன் தனது ஆடுகளை மேய விட்டு விட்டு மரத்தினடியில் அமர்ந்து கொண்டு இருந்தான். பணியேதும் இன்றி ஓய்வாக அமர்ந்திருப்பது அலுப்பு ஏற்படுத்த, விளையாடும் எண்ணத்துடன் ,“ஓநாய்! ஓநாய் வருகிறது! என் ஆடுகளைக் கொன்று புசிக்க ஓநாய் வருகிறது!” என்று கூக்குரலிட்டான் சிறுவன். இந்த சிறுவனுடைய கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்து வயல்களில் விளையாடிக் கொண்டிருந்த நபர்கள் சிறுவன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தனர்.

சிறுவன் அருகே அனைவரும் வந்து பார்த்தால், அவன் கவலையின்றி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். மேலும் அங்கு வருகை புரிந்தவர்களைப் பார்த்து இடைவிடாது நகைக்கத் தொடங்கினான். வருகை தந்தவர்கள் இவ்வாறு பொய்யுரைக்க வேண்டாம் என்று சிறுவனைக் கண்டித்துவிட்டு, தங்களது பணிகளைப் பார்க்க சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் சிறுவன் முன்பு போலவே,”ஓநாய்! ஓநாய் வருகிறது!”என்று கத்தினான்.இம்முறையும் சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள், அவனது கேலிச்சிரிப்பைக் கண்டு,கோபமுற்று, “இவ்வாறு பொய் கூறாதே! மீறி கூறினால் உண்மையாக இது போன்ற சம்பவம் நேருகையில் உனக்கு யாரும் உதவ முன்வரமாட்டார்கள்.” என்று அறிவுறுத்திவிட்டு சென்றனர்.

சிறுவன் மீண்டும் சிறிது நேரத்திற்கு பின் மூன்றாவது முறையாக “ஓநாய் வருகிறது! ஓநாய்!” என்று கூக்குரலிட்டான். அவன் மீண்டும் பொய்யுரைக்கிறான் என்று எண்ணி கிராமமக்கள் யாரும் அவனை காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால் இம்முறை உண்மையாகவே ஓநாய் வந்து அவன் மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளைத் துவம்சம் செய்துவிட்டு சென்றுவிட்டது.

இதனால் மனம் வருந்தி அழுது கொண்டே சிறுவன் மலையில் அமர்ந்துவிட்டான். மாலை வெகுநேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால், அவனின் பெற்றோர் கிராமத்தாரின் உதவியுடன் சிறுவனைத் தேடிக்கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு அழுது கொண்டிருந்த சிறுவனிடம் விவரம் கேட்ட பொழுது, அவன், “உண்மையாகவே ஓநாய் வந்தது; அப்பொழுது நான் உங்களை அழைத்தேன் யாரும் உதவிக்கு வரவில்லை.ஓநாய் ஆடுகளை விரட்டியதால், ஆடுகள் சிதறி நாலாப்பக்கமும் சென்று விட்டன. நான் அழைத்தும் யாரும் உதவ முன்வராதது ஏன்?” என்று கேட்டான்.

அப்பொழுது கிராமத்தை சார்ந்த ஒரு முதியவர், “மக்கள் பொய்யர்களை நம்பமாட்டார்கள். அவர்கள் உண்மையையே கூறினாலும் பொய்யர்களின் பேச்சினை யாரும் உண்மை என கருதமாட்டார்கள்.” என்று உரைத்தார்; பின் வாருங்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லலாம், காலை விடிந்ததும் ஆடுகளைத் தேடலாம் என்று கூறி அனைவரையும் இல்லம் நோக்கி செல்லுமாறு உரைத்தார்; சிறுவன் உட்பட அனைத்து மக்களும் இல்லத்தை நோக்கி செல்லத் தொடங்கினர்.

Moral of the Story: பொய்மை நம்பிக்கையை உடைக்க வல்லது, பொய்யர்கள் உண்மையையே கூறினாலும், யாரும் அவர்களை நம்பமாட்டார்கள்!

ஒரு மனிதனும் பூனையும்!

ஒரு நாள் ஒரு நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்; அச்சமயம் ஒரு புதரில் ஓர் பூனை மாட்டிக்கொண்டு விடுபட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. புதரில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாததால் பூனை மிரண்டு போயிருந்தது.அதன் நிலையைக் கண்ட அந்த நபர் அதற்கு உதவ முற்பட்டார். புதரில் மாட்டியிருந்த பூனையை வெளியே கொண்டு வர முயற்சிக்கையில் பூனை தனது கரங்களால் அந்த நபரை கீறி, காயத்தை ஏற்படுத்தியது.

அந்த நபர் ஒவ்வொரு முறை அதைத் தொட்டு விடுவிக்க முயற்சிக்கையிலும், அப்பூனை இவ்வாறு கீறுவதை தொடர்ந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு நபர் இதைப் பார்த்துவிட்டு, பூனைக்கு உதவ முயலும் நபரிடம், “அப்பூனையை அப்படியே விட்டு விடுங்கள்; வீணாக நீங்கள் காயம் அடைவது ஏன்? அதுவே வெளியே வந்து விடும் என்று அறிவுறுத்தினார்.”

ஆனால் பூனைக்கு உதவிக்கொண்டிருந்த நபர், மற்றொரு நபர் கூறிய அறிவுரையைக் காதிலேயே வாங்கி கொள்ளாமல், பூனையை விடுவிக்க முனைந்தார். பின்னர் அந்த நபரிடம், “பூனை ஒரு மிருகம்.அதனால் அது அதன் தன்மையை வெளிப்படுத்தியது. நான் ஒரு மனிதன.ஆக நான் எனது மனிதத்தன்மையை வெளிப்படுத்தினேன்.” என்று கூறினார்.

Moral of the Story: உன்னைப்போல் பிறரையும் நேசி! உனக்கான குறிக்கோள் மற்றும் கொள்கைகளை நீயே வகுத்து, அதன்படி நடக்க முயல்வாயாக! பிறரின் தேவையற்ற அறிவுரையைச் செவிமடுக்காது இருப்பாயாக!

ஒரு பெருமிதமுள்ள பயணி!

ஒரு பெருமிதமுள்ள பயணி, தனது பயணத்தை முடித்த பின் தான் செய்த சாகச விஷயங்களைப் பற்றியும், பார்த்த இடங்களைப் பற்றியும் பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். அச்சமயம் தான் ஒரு பெரிய பாலத்தை ஒரே பாய்ச்சலில் தாண்டி குதித்தாகப் பெரிதாக ஜம்பம் காட்டிப் பேசினார்.

அவரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஒரு துடிப்பான இளைஞன், அங்கு இருந்த ஒரு பாலத்தைக் காட்டி, பயணத்தில் செய்த சாகசத்தை இங்கும் செய்து காட்டுமாறு கேட்டான். அதைக்கேட்டு அந்தப் பயணி, வியர்த்துக் கொட்ட நின்றுகொண்டு விழித்தார்.

Moral of the Story: உங்களால் செய்ய முடியாத ஒன்றை, செய்யமுடியும் என்று பெருமிதம் காட்டிப் பேசுவதைத் தவிருங்கள்!

தங்க முட்டை!

ஒரு விவசாயி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்; அவரிடம் தங்க முட்டையிடும் ஒரு வாத்து இருந்தது. தினமும் அந்த வாத்து ஒரு தங்க முட்டை அளிக்கும்; அதை விற்று அந்த விவசாயி தனது தினசரி வாழ்க்கையை நடத்தி வந்தார். திடீரென ஒரு நாள் வாத்தின் வயிற்றில் இருக்கும் அனைத்து முட்டைகளையும், ஒரே நாளில் எடுத்து விற்றுவிட்டால் அதிக பணம் கிடைக்கும் என்று சிந்தித்த விவசாயி, அதனை தனது மனைவியிடம் கூறினான்.

அவன் மனைவியும் கொஞ்சம் கூட யோசித்து பார்க்காமல், சரி என்று கூற, அச்சமயமே அவர்கள் வாத்தினை அறுத்து அதிலிருந்து தங்க முட்டைகளை எடுக்க முயன்றனர்; ஆனால் தங்கமுட்டைகளுக்குப் பதிலாக வாத்தின் உடலில் இருந்து இரத்தமே வெளிப்பட்டது. தம்பதியர் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன் தங்களுக்கு இத்தனை நாள் சோறு போட்டுக்கொண்டிருந்த பெரும் மூலதனத்தையும் இழந்து தவித்தனர்.

Moral of the Story: செயல்படும் முன், நன்கு சிந்தித்து பின் செயல்பட தொடங்குங்கள்; சிந்தித்து செயலாற்றுங்கள்!

நன்றி கொன்ற ஓநாய்

ஒரு நாள் அடர்ந்த காட்டில் ஓநாய் வாழ்ந்து வந்தது. அதற்கு வசமான மாமிச வேட்டை கிடைத்தது. ஆவலுடன் வேக வேகமாக இரையைத் தின்றது.

அப்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக் கிக் கொண்டது. வலி பொறுக்க முடியா மல் ஊளையிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியது. அப்போது ஒரு கொக்கு எதிரே வந்தது.

அதனிடம் சென்ற ஓநாய் தனது தொண்டையில் மாட்டிக்கொண்ட எலும்பை எடுத்தால் தன்னிடம் உள்ள ஏராளமான பொன்னையும் பொருளை யும் தருவதாக ஆசை வார்த்தை கூறி,

உதவும்படி மிகவும் கெஞ்சியது. ஓநா யின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய கொக்கு உதவ முன் வந்தது.

தனது நீண்ட அலகை ஓநாயின் வாய்க்குள் விட்டு எலும்பை எடுத்தது. சொன்னபடி பரிசு தரும்படி கொக்கு கேட்டது. பரிசா! உனக்கு… நான் தரு வதா? என்று ஏளனமாகச் சிரித்தது ஓநாய்.

மேலும் உன் கழுத்தைக் கடித் துக் கொல்லாமல் உயிருடன் உன்னை விடுவதே பெரிது. மரியாதையாக இந்த இடத்தை விட்டு ஓடி விடு என்று விரட்டி யடித்தது.

நன்றியில்லாத ஓநாய்க்கு உத வியது பாவம் என்று எண்ணிக்கொண்டே கொக்கு தன் வழியே சென்றது.

Moral of the Story: ஆபத்தில் உதவியவனை அலட்சியப் படுத்தக்கூடாது.

சிரிக்க வைத் தால் பரிசு

ஒருநாள், அக்பர் பீர்பாலை அழைத்து, என்னைச் சிரிக்கும்படி செய் துவிட்டால், நீர் கேட்கும் பரிசை அளிப் பேன் என்றார்.

பீர்பால் பல வழிகளில் முயன்று பார்த்தார். அக்பர் சிரிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். இறுதி யில், பீர்பால் ஒரு தந்திரம் செய்தார்.

பீர்பால் அக்பருக்கு அருகில் சென்று அவருடைய காதில், இப்பொழுது நீங்கள் சிரிக்கவில்லை என்றால் என்ன செய்வேன் தெரியுமா?

என்றவர் மன்ன ரின் காதில், நான் என் விரல்களால் உங் கள் விலா எலும்புகளை அழுத்தி, கூச் சத்தை உண்டாக்குவேன் என்று குசு குசு வென்று சொல்லத் தொடங்கினார்.

பீர்பால் சொன்னதைக் கேட்ட வுடனே அக்பர் சிரித்து விட்டார். பீர் பால் தனது தந்திரத்தால் சவாலில் வெற்றி பெற்றார்.

Moral of the Story: வெற்றி பெறுவதற்கு முயற்சி மட் டும் போதாது தந்திரமும் வேண்டும்.

நனைந்த கால்சட்டைகள்

பள்ளியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த ஒன்பது வயது மாணவன் திடீரென தனது கால்சட்டை ஈரமாவதை உணர்ந்தான்.உணர்ந்த சற்று நேரத்தில் அந்த ஈரத்தின் காரணம் சிறுவனுக்குப் புலப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தன்னை மற்ற மாணவர்கள் கண்டால், என்ன நினைப்பார்கள் என்ற பயம் மாணவனின் மனதில் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் தூரத்தில் தனது தோழி சுஷி மற்றும் தனது ஆசிரியர் நடந்து வருவதைக் கண்டான்.அந்த மாணவன் தனது தோழி சுஷியின் கையில் ஒரு சிறு மீன்தொட்டி இருப்பதையும் கண்டான். உடனே யோசித்து, தோழி சுஷி தன் மீது மோதுமாறு, அவளுக்கு எதிராக நடந்து சென்றான.அவன் எதிர்பார்த்தது போலவே சுஷி கையில் வைத்திருந்த மீன்தொட்டியில் இருந்த நீர்,அவனது கால்சட்டையில் கொட்டியது.

அவனது ஆசிரியர் அவன் வேண்டுமென்றே இவ்வாறு செய்தான் என்பதை கவனித்து விட்டார்.ஆனால் அவனோ தன் மீது வேண்டுமென்றே சுஷி நீரைக் கொட்டித் தனது ஆடையை ஈரமாக்கி விட்டாள் என்று கத்தினான். உடனே ஆசிரியர் அவனை அருகிலிருந்த அறைக்கு அழைத்து சென்று கால்சட்டையைச் சுத்தப்படுத்திக்கொள்ள உதவினார். பின்பு அங்கு வந்த சுஷி அந்த மாணவனின் காதில், “நீ அதை வேண்டுமென்றே செய்தாய் அல்லவா? இது போன்று நானும் சில சமயங்களில் கால்சட்டையை ஈரமாக்கியுள்ளேன்.” என்று கிசுகிசுத்தாள்.

Moral of the Story: ஒவ்வொருவருக்கும் நல்ல நேரம் மற்றும் தீய நேரம் என இரண்டும் ஏற்படும்; கெட்ட நேரங்களிலும் உறுதுணையாய் இருப்பவர்களே, உண்மையான நண்பர்கள்.

கோபத்தை கட்டுப்படுத்துதல்.!

ஒரு பையன் எதற்கெடுத்தாலும் மிகவும் கோபப்படுபவனாக இருந்தான். அவன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் அவனது வீட்டார் மற்றும் சுற்றத்தாரைப் பெரிதும் காயப்படுத்தின. பையனின் நிலையை மாற்ற விரும்பிய அவனது தந்தை, அவனிடம் ஒரு சுத்தியல் மற்றும் பை நிறைய ஆணிகளை தந்து, “உனக்கு எப்பொழுதெல்லாம் கோபம் வருகிறதோ அச்சமயம் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் மரவேலியில் இந்த ஆணிகளை அடித்து விடு.” என்று கூறினார்.

பையனும் தந்தை கூறியவாறே செய்து வந்தான்.பையிலுள்ள ஆணிகள் விரைவில் தீர்ந்து போயின. தந்தை அடுத்த ஆணிகள் நிறைந்த பையைப் பையனிடம் கொடுத்தார். இவ்வாறு தொடர்ந்து செய்து வருகையில் தனது கோபம் குறைந்து,உணர்வுகள் கட்டுப்பாட்டிற்குள் வருவதை பையன் உணர்ந்தான். பின்னர் அதை அவனது தந்தையிடம் தெரிவித்தப் பொழுது, அவன் தந்தை,”இப்பொழுது நீ மரவேலியில் அடித்த ஆணிகளை எடுத்து விடு.” என்று கூறினார்.

தந்தை கூறியவாறு அடித்த அத்தனை ஆணிகளையும் எடுக்கையிலும் கூட, பையனுக்குக் கோபம் ஏற்படவில்லை; இதையும் கவனித்த தந்தை, தனது பையனை அழைத்து, “இப்பொழுது உன் கோபம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. ஆனால், நீ ஒரு விஷயத்தை கவனித்தாயா?”என்று கூறி, வண்ணம் தீட்டிய மரவேலியைக் காட்டி, அதில் நீ அடித்த ஆணிகளை நீக்கிய பின்பு ஏற்பட்டுள்ள துளைகளைக் கவனித்தாயா? என்ன தான் வண்ணம் தீட்டி இருப்பினும் அத்துளைகள், மரவேலியின் அழகை குலைக்கின்றன.இதுபோல்தான் முதலில் நீ கோபப்பட்டு,தற்பொழுது அந்தக் குணத்தை விட்டு மீண்டு வந்திருந்தாலும் நீ பேசிய கோப வார்த்தைகளால் மற்றவர் மனதில் ஏற்பட்ட காயம் இத்துளைகள் போலவே ஆறாமல் இருக்கும். ஆகையால் இது போன்ற ஒரு தவறை இனி என்றும் உன் வாழ்நாளில் செய்யலாகாது.” என்று அறிவுரை கூறினார்.

Moral of the Story: கோபம் என்பது ஒரு கத்தியைப் போன்றது; கத்தியைக் கொண்டு ஒரு மனிதனைக் குத்தினால், அதனால் ஏற்பட்ட காயம் ஆறிய பின்னும் அதனால் ஏற்பட்ட தழும்பு அந்நபரில் நிலைத்திருக்கும். அது போன்றே கோபத்தால் பேசிய வார்த்தைகளும் மனதில் ஆறா தழும்பை ஏற்படுத்திவிடும்.

மூத்தோர் சொல் கேள்!

ஒரு தாய் நாய் அதன் குட்டிகளுடன் ஒரு வயலின் அருகில் வசித்து வந்தது.எப்பொழுதும் தாய் நாய்க் குட்டிகளிடம், எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடுங்கள், ஆனால் அந்த கிணற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று கூறி இருந்தது. ‘அன்னை ஏன் கிணற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்? அப்படி அங்கு என்ன தான் இருக்கிறது’ என யோசித்த ஒரு குட்டி நாய், கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்தது.

அச்சமயம் நாயின் பிரதிபலிப்பு நீரில் தோன்றியது; குட்டி நாய் என்னென்ன செய்கிறதோ, அதை கிணற்று நீர் பிரதிபலித்தது. ஆனால் கிணற்றின் உள்ளே இருக்கும் வேறொரு நாய் தன்னைக் கேலி செய்வதாக எண்ணிய குட்டி நாய், அந்த கிணற்றிலிருக்கும் நாயுடன் சண்டையிடும் நோக்கில், கிணற்றில் குதித்தது. குதித்த பின்னர் தான் நாய்க்குப் புரிந்தது; அது தனது பிரதிபலிப்பு என்று. மேலே எப்படி செல்வது என்று அறியாமல், குரைத்து கொண்டே நீரில் நீந்திக்கொண்டிருந்தது குட்டி நாய்.

நாயின் குரைப்பு சத்தம் கேட்ட விவசாயி, நாயைக் கிணற்றில் இருந்து காப்பாற்றினார்; அச்சமயம் தாய்நாயின் அறிவுரையை மீறியது எத்தனை பெரிய தவறு என்று உணர்ந்து கொண்டது.

Moral of the Story: மூத்தோர் வார்த்தையை எப்பொழுதும் காதுகொடுத்துக் கேளுங்கள்; அவர்கள் கூறுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை கேளுங்கள். ஆனால் அவர்தம் வார்த்தையை நிராகரிக்காதீர்கள்.

தீய பழக்கங்கள்!

ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன் அதிக தீய பழக்கங்கள் கொண்டவனாக விளங்கினான்; அவனை திருத்த எவ்வளவோ முயன்றும் அந்த தொழிலதிபரால் வெற்றி பெற முடியவில்லை. ஆகையால், அவர் ஒரு வயது முதிர்ந்த ஞானியிடம் தனது பையனைத் திருத்த உதவி கேட்டார்.அந்த ஞானியும் ஒப்புக்கொண்டு அத்தொழிலதிபரின் பையனை சந்தித்து நடை பயணம் மேற்கொள்ள அழைத்து சென்றார்.

அச்சமயம் அவர்கள் இருவரும் வனப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கையில், அந்த வயதான ஞானி சிறுவனிடம் ஒரு சிறு செடியைக் காட்டி, “அதை உன்னால் பிடுங்க இயலுமா?” என்று கேட்டார்; சிறுவனும் உடனே அதைப் பிடுங்கிக் காட்டினான். பின்னர் ஞானி சற்று பெரிய தாவரத்தை காட்டி, “இதை பிடுங்க இயலுமா?” என வினவினார்; சிறுவனும் எளிதாகப் பிடுங்கிக் காட்டினான்.

சற்று தூரம் சென்ற பின் ஒரு முட்புதரைக் காட்டி, இதனைப் பிடுங்கிட முடியுமா என்று வினவ சிறுவனும் தனது சக்தியைப் பயன்படுத்தி அதைப் பிடுங்கிக் காட்டினான்; பின்னர் ஞானி ஒரு சிறிய மரத்தைக் காட்ட, பெரும்முயற்சி மேற்கொண்டு சிறுவன் அதை சாய்த்துக் காட்டினான். இப்பொழுது ஞானி வயது முதிர்ந்த ஒரு பெரிய மரத்தைக் காட்டி பிடுங்குமாறு சிறுவனிடம் கூற, சிறுவன் செய்வதறியாது நின்றான். அப்பொழுது ஞானி சிறுவனிடம், “பழக்கங்களும் இது போன்றதே!தீயப் பழக்கத்தை முளையில் கிள்ளி எறிந்துவிடலாம். ஆனால் அது வளர்ந்து விட்டால், அதிலிருந்து விடுபட்டு நற்பழக்கங்களை மேற்கொள்வது கடினம்.” என்று கூறினார்.

Moral of the Story: தீய பழக்கங்கள் நமது வழக்கமாகி விட்டால், அவற்றிலிருந்து மீள்வது கடினம்; ஆகையால், அவற்றை ஆரம்ப கால கட்டத்திலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.

சுவரின் மறுபக்கம்!

தன் பாட்டி உருவாக்கிய அழகிய தோட்டத்தைப் பக்குவத்துடன் பார்த்து பார்த்து கவனித்து வந்தாள் அந்த அழகான பெண். ஒரு நாள் ஒரு செடியைப் புகைப்படத்தில் பார்த்து, அதன் மலர்களின் அழகில் இலயித்த இந்தப் பெண், அச்செடியை வாங்கி வந்து, தனது தோட்டத்தில் நட்டு வளர்த்து வந்தாள். அந்தச் செடிக்கென பிரத்யேக கவனிப்பு அளித்து வளர்த்து வந்தாள்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் பல கடந்தும், அச்செடிப் பூக்களைப் பூக்காமல் இருந்தது கண்டு, மனமுடைந்த அப்பெண் அச்செடியை அகற்றி விட முடிவெடுத்தாள். அச்சமயம் பக்கத்து வீட்டு முதியவர் இப்பெண்ணை அழைத்து, “அழகான மலர்களைத் தரும் செடியை நட்டு, என் மனதை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தினாய்.இந்த வயதான காலத்தில் மனம் குழம்பி, தனிமையில் வாடிக்கொண்டிருந்த எனக்கு, நீ நட்டு வைத்த செடியில் பூத்த மலர்கள் மனமாற்றத்தை அளித்தன; அவற்றை காணும் பொழுதெல்லாம் என் மனம் பேருவகை அடைகிறது!”என்று மனம் நெகிழ்ந்தாள் அந்த மூதாட்டி.

அப்பொழுது தான் சுவரின் மறுபக்கத்தில் அழகான மலர்கள் மலர்ந்திருந்ததையும், தனது சுவரில் இருந்த பிளவுகளால், மலர்கள் எதுவும் பூக்காமல் இருந்ததையும், அந்தப் பெண் கவனித்தாள். மலர்களைக் கண்டு அவளும் பெரும்மகிழ்ச்சி அடைந்தாள்.

Moral of the Story: நீங்கள் செய்த வேலைகளுக்கு நற்பலன் கிடைக்கவில்லை என்று மனம் வருந்தாதீர்; நீர் செய்த கடின உழைப்புக்கு நிச்சயம் ஒரு நாள் பலன் கிடைத்தே தீரும்.

சேவலும் இரத் தினக்கல்லும்

ஒரு சேவல் தனக்குத் தேவை யான உணவை குப்பையைக் கிள றித் தேடிக் கொண்டிருந்தது. அப் போது அதற்கு ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக்கல் கிடைத்தது.

அதனை பார்த்த சேவலின் குஞ்சு ஒன்று சேவ லின் அருகே வந்து ஆவலுடன் அந்தக் கல்லை திருப்பி போட்டது.

உடனே சேவல் வருத்தமாக இந் தக் கல் எனக்கு கிடைத்ததனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது. அதுவே ஒரு இரத்தின வியாபாரியின் கைக்கு கிடைத்திருந்தால் இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று அவனுக்கு தெரிந் திருக்கும்.

எனக்கு இந்தக் கல் கிடைத்த தைக் காட்டிலும் இந்த குப்பையிலிருந்து ஒரு தானியம் கிடைத்திருந்தால் அதுவே எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லா தப் பொருள் என்று கூறியது சேவல்.

Moral of the Story: எந்த பொருளும் ஒரு இருக்க வேண்டிய இடத்தில் இருந் தால் தான் சிறப்பு.

புகையிலை

புகையிலை புகையிலை போடும் பழக்கம் பீர்பாலுக்கு இருந்தது. மன் னர் எவ்வளவு சொல்லியும் பீர்பாலினால் புகையிலை பழக்கத்தை விட முடிய வில்லை.

மூத்த அமைச்சர் ஒருவருக்கு, பீர்பால் புகையிலை போடுவது சுத்தமாக பிடிக்கவில்லை.

இதற்காக சந்தர்ப்பம் பார்த்து, பீர்பாலை அவமானப் படுத்த வேண் டும் என்று நினைத்துக்கொண்டிருந் தார். அந்த நாளும் வந்தது.

மன்ன ரும், மூத்த அமைச்சரும் காற்றோட்ட மாக அரண்மனைத் தோட்டத்தில் உல வியவாறு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில்,

மூத்த அமைச்சர் அந்த அரண்மனைத் தோட்டத்தின் வேலியோ ரத்தில் ஒரு புகையிலைச் செடி தானாக முளைத்து இருப்பதைப் பார்த்தார்.

அப் பொழுது அந்த வழியாக வந்த கழுதை ஒன்று, புகையிலை சாப்பிட எண்ணி இலையில் வாயை வைத்தது. அதன் காரமும், மணமும் பிடிக்காமல் உண்ணா மல் சென்று விட்டது.

உடனே மூத்த அமைச்சர் சிரித் துக் கொண்டே பாருங்கள் மன்னா! பீர் பாலுக்கு பிடித்த இந்த புகையிலை கேவலம் ஒரு கழுதைக்குக்கூட பிடிக்க வில்லை என்றார்.

உடனே பீர்பால் சிரித் துக் கொண்டே, புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள். ஆனால் கழு தைக்குத்தான் புகையிலையைப் பிடிப்ப தில்லை! என்றார்.

பீர்பால் தனது வாக்கு வன்மையால் அந்த மூத்த அமைச்சரின் மூக்கை உடைத்தார்.

Moral of the Story: ஒருவருக்கு பிடித்தது மற் றவருக்கும் பிடிக்க வேண்டும் என்றுக் கட்டாயம் ஒன்றும் இல்லை.

தாய் நண்டும் குழந்தை நண்டும்!

ஒரு நாள் தாய் நண்டும், குழந்தை நண்டும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தன.பின் சிறிது நேரம் கழித்து எழுந்து நடக்கையில், தாய் நண்டு குழந்தை நண்டிடம் பக்கவாட்டாக நடக்காமல், நேராக நடந்து செல் என்று கூறியது. அதைக்கேட்ட குழந்தை நண்டு தன் தாயிடம், “அன்னையே! நான் எவ்வளவு முயன்றும் என்னால் நேராக நடக்க முடியவில்லை; நீங்கள் கொஞ்சம் கற்றுக்கொடுக்கிறீர்களா?” என்று கேட்டது.

தாய் நண்டும் நேராக நடக்க முயன்றது.ஆனால் அதனாலும் அப்படி நடக்க முடியவில்லை. பின் தன் குழந்தையிடம் மன்னிப்பு கேட்டது அந்தத் தாய் நண்டு.

Moral of the Story: உங்களால் செய்ய முடியாத ஒன்றை, என்றும் பிறரைச் செய்யுமாறு வற்புறுத்தாதீர்!

ஒட்டகமும் அதன் குழந்தையும்!

ஒரு ஒட்டகமும் அதன் குட்டியும் பேசிக்கொண்டிருந்தன; அப்பொழுது ஒட்டகக் குட்டி, தாயிடம்,” நமக்கு ஏன் திமில் உள்ளது?” என்று கேட்டது; அதற்கு தாய் நாம் பாலைவனத்தில் தண்ணீர்த் தாகம் இன்றி வாழ திமில் உதவும். பின்னர் குட்டி கேட்டது,”நமக்கு வட்டமானப் பாதம் இருப்பதேன்?” என்று. அதற்கு தாய், பாலைவன மணலில் நாம் நடக்க இந்த வட்டமான பாதம் உதவும் என்று பதிலளித்தது.

பின்பு குட்டித் தாயிடம்,” நமக்கு நீளமாக காது மடல்கள் இருப்பதேன்?” என்று கேட்டது. அதற்கு தாய்,” பாலைவனத்தில் மணல் நம் காதுகளுக்குள் சென்று விடாமல் தடுக்கவே பெரிய காது மடல்கள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன.” என்று விடை அளித்தது.

எல்லா பதில்களையும் கேட்ட குட்டி ஒட்டகம்,”இவை அனைத்தும் நாம் பாலைவனத்தில் இருந்தால் தானே பயன்படும், நாம் இருப்பதோ சரணாலயத்தில் அல்லவா? பின் இவற்றால் என்ன பயன்?”என்று கேட்டது. இதைக் கேட்ட தாய் வாயடைத்து நின்றது.

Moral of the Story: நீங்கள் ஒரு சரியான இடத்தில் இருந்தால் மட்டுமே, உங்கள் சக்தி, ஆற்றல், திறன் ஆகிய எல்லாமே பயன்படும்.

அடிமையானக் குதிரை

ஒரு குதிரைக்கும், கலைமானுக் கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண் ணியக் குதிரை ஒரு மனிதனின் உத வியை நாடியது.

அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான்.

தனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத் தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது.

தன் கடிவாளத்தை நீக் கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டி யது. குதிரையே, உன்னை விடுவிப்பதா! அது முடியவே முடியாது.

நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகை யால் உன்னை விடுவிக்கவே மாட் டேன் என்று கூறிச் சிரித்தான்.

அன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந் தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண் டியதாயிற்று.

Moral of the Story: பிறருக்கு கேடு நினைப்ப வன் நிச்சயம் கெட்டுப்போவான்.

அழகின் ஆபத்து

ஒரு நாள் கலைமான் ஒன்று தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக நீர் நிலைக்கு வந்தது. நீரை அருந்தும் போது நீரில் தெரியும் தன் கொம்புகளின் நிழலைக் கண்டு பெருமிதம் அடைந்தது.

ஆஹா! என் தலையில் உள்ள கொம் புகள் எவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் என் குச்சிக் கால்கள் என் அழ கைக் கெடுக்கின்றது என்று நினைத்தது.

தன் அழகிற்கு ஏற்ற கால்கள் இல்லா ததை எண்ணி தனக்குத்தானே வருந்தி யது.

அந்த வேளையில் ஒரு சிங்கம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த மான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடியது.

சிங்கம் துரத்திக் கொண்டே சென்றது. வேகமாக ஓடும் போது மானின் கொம்புகள் செடி, கொடி களில் மாட்டிக் கொண்டு விடவே,

மானால் வேகமாக ஓடமுடியாமல் அச் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டது. அப் போது தான் மானிற்குப் புரிந்தது.

என் உயிரைக் காக்க உதவும் என் கால் களைப் பழித்தேன். எனக்கு எமனாக இருந்த என் கொம்புகளை புகழ்ந்தேன்.

நன்றி மறந்த எனக்கு இது சரியான தண் டனை என்று கூறி வருந்தியபடி தன் உயிரை விட்டது.

Moral of the Story: அழகு ஆபத்து.

உள்ளதும் போச்சு

ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டி ருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது.

அந்த சிங் கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது.

அதே நேரத்தில் அந்த வழி யாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரி யது.

அதனால் மானை சாப்பிட ஆசைப் பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத் தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது.

தனக்கு உள்ள ஆபத்தைப் புரி கொண்டு ஓடி ஒளிந்து கொண் டது. சிங்கமானது அந்தக் கலை மானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது.

சரி முய லையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த் தால் அங்கு முயலைக் காணவில்லை.

முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்து டன் எனக்கு இதுவும் வேண்டும், இன் னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதை யும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது.

Moral of the Story: பேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஒரு நாள் ஓநாய் ஒன்று அதிக மான தாகத்துடனும், பசியுடனும் தவித் துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது.

சிறிது தூரத்தில் ஒரு ஆட் டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண் டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது.

அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க வில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது.

ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்து டன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறேன். நீங் களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீர் ரைக் குடிக்கிறீர்கள்.

அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது. ஆறு மாதத்திற்கு முன் னால் உன் தந்தை இப்படித்தான் என்னி டம் வாயாடினார். வாயாடியதற்காக அவ ருடைய தோல் அன்று உரிக்கப்பட்டது.

அது போல் உன் தோலையும் உரித் தால் தான் நீ வாயாடுவதை நிறுத்து வாய் என்று கோபமாகச் சொல்லியது ஓநாய் ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந் தது. ஐயா! நான் சொல்வதை நம்புங்கள்.

நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று மிகப் பணிவாகச் சொல்லியது. ஓநாய் கோபமாகப் பற்க ளைக் கடித்துக் கொண்டு எங்கள் இனத் தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது.

இப்போது நீ உன் முன்னோர் கள் செய்த கொடுமைகளுக்கு எல் லாம் சேர்த்து தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்து ஆட்டுக் குட்டியைக் கொன்றுத் தின்றது ஓநாய்.

Moral of the Story: கெட்டவர்கள் ஒருபோதும் இரக்கப்பட மாட்டார்கள்

சிங்கமும் கரடியும்

ஒரு சிங்கமும் கரடியும் சேர்ந்து ஒரு மானை வேட்டையாடிக் கொன் றன. கொன்ற மானைப் பங்கு போடுவ தில் சிங்கத்திற்கும், கரடிக்கும் இடையே பயங்கரமான சண்டை வந்தது.

வெகு நேரம் சண்டை செய்ததால் இரண்டும் களைப்படைந்துத் தரையில் சாய்ந்தன. இதனை வெகுதூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு குள்ள நரி ஓடி வந்து பங்கு போட வைத்திருந்த மானைத் தூக் கிக் கொண்டு ஒடியது.

சிங்கமும் கரடி யும் கீழே விழுந்தவர்கள்தான், அவர்க ளால் எழவே முடியவில்லை. நாம் இருவ ரும் இப்படி வீணாகச் சண்டை போட்டுக் கொண்டு நமக்குரிய இரையை இழந்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட் டன.

Moral of the Story: ஒற்றுமையே பலம்.

Friends, hope you have liked our Post Moral Stories in Tamil. If you liked this post, then you must share it with your friends. If you have liked our site StoryLiterature.Com, then bookmark it.

Post a Comment

Previous Post Next Post